முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் 90 மீட்டர் நீளத்தில் ரூ.2 கோடியில் புதிய படகு நிறுத்தும் தளம்..!

தமிழகம்

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் 90 மீட்டர் நீளத்தில் ரூ.2 கோடியில் புதிய படகு நிறுத்தும் தளம்..!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் 90 மீட்டர் நீளத்தில் ரூ.2 கோடியில் புதிய படகு நிறுத்தும் தளம்..!

இந்தியாவின் தென்கோடி முனையான இந்நகருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய 3 பெருங்கடல்களும் சந்திக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது.அதிகாலையில் சூரியன் உதயமாவதும், மாலையில் ஆதவன் மறையும் அற்புத காட்சியும் இங்குதான் காண முடியும்.

இங்கு கடலில் சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையும் அமைந்துள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை நேரில் பாா்த்துச் செல்லும் வகையில் தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுசேவையை இயக்கி வருகிறது.பொதிகை, குகன், விவேகானந்தா என்ற 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இயக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் படகு நிறுத்தும் தளமும் உள்ளது. தற்போது இந்த தளத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான 3 படகுகளும், விவேகானந்தா கேந்திராவுக்கு சொந்தமான ஏக்நாத் என்ற படகும் நிறுத்தப்பட்டு உள்ளது.இந்த படகு நிறுத்தும் தளம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது பழுதடைந்து உள்ளது. மேலும் கூடுதல் படகுகள் நிறுத்தவும் இங்கு வசதிகள் இல்லை. இதனால் புதிதாக ரூ.2 கோடி செலவில் படகு நிறுத்தும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதிய படகு நிறுத்தும் தளம் 90 மீட்டர் நீளத்தில் அமைய உள்ளது. தற்போது உள்ள படகுகள் தவிர மேலும் 2 படகுகள் நிறுத்தவும் இங்கு வசதி செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் வருகிற 27-ந்தேதி முதல் படகு நிறுத்தும் தளம் கட்டும் பணி தொடங்க உள்ளது. இதற்காக ராட்சத சிமெண்ட் பிளாக்குகள் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் தயாராகி வருகிறது.

Leave your comments here...