ஒடிசாவைத் தமிழர் ஆளாலமா…? கைக்கொடுத்த அமித்ஷாவின் தேர்தல் பிரச்சார வியூகம் -தட்டி தூக்கிய பாஜக…!

அரசியல்

ஒடிசாவைத் தமிழர் ஆளாலமா…? கைக்கொடுத்த அமித்ஷாவின் தேர்தல் பிரச்சார வியூகம் -தட்டி தூக்கிய பாஜக…!

ஒடிசாவைத் தமிழர் ஆளாலமா…? கைக்கொடுத்த அமித்ஷாவின் தேர்தல் பிரச்சார வியூகம் -தட்டி தூக்கிய பாஜக…!

ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 73 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 18 மக்களவை தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது.

இந்தத் தேர்தலுடன் சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு கடந்த ஜூன் 2ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கானச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 70+ இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் 50+ இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார். சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறலாம்.

கடந்த தேர்தல்களில் பாஜக – பிஜூ ஜனதா தளம் தனித்துப் போட்டியிருந்தாலும், நவீன் பட்நாயக்க்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை பாஜக முன்வைத்ததில்லை. ஆனால், இந்தமுறை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது பாஜக. தவிர, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்தும் கருத்துக்களைத் தெரிவித்தது. தவிர, பூரி ஜகன்னாதர் கோவில் சாவி என ஒடிசா மக்களின் உணர்வுகளுக்கு நெருக்கமான விஷயங்களை பிரசாரத்தில் முன்வைத்தது பாஜக.

தவிர ஒடிசாவைத் தமிழர் ஆளாலமா என அமித் ஷா, தமிழரான வி.கே.பாண்டியனை முன்வைத்து மிகத் தீவிரமாக முன்னெடுத்தார். தவிர, இவ்வளவு ஆண்டுகளில் ஒடிசாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல நவீன் பட்நாயக் என்ன செய்தார் என்கிற விமர்சனங்களையும் முன்வைத்தது பாஜக.

பாஜகவின் இந்த பிரசார வியூகம் மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது. அதேவேளை தொடர்ந்து 24 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தபோதும், தற்போதும் ஐம்பதுக்கும் அதிகமான இடங்களைப் பிஜு ஜனதாதளம் பெற்றிருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

Leave your comments here...