குழந்தைக்கு “குடியுரிமை” என பெயர் சூட்டிய பாக்கிஸ்தான் வாழும் இந்து குடும்பம்…!

இந்தியா

குழந்தைக்கு “குடியுரிமை” என பெயர் சூட்டிய பாக்கிஸ்தான் வாழும் இந்து குடும்பம்…!

குழந்தைக்கு “குடியுரிமை” என பெயர் சூட்டிய பாக்கிஸ்தான் வாழும் இந்து குடும்பம்…!

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைப்போல பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தி வருகின்றனர்.  பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா டில்லியில் லஜ்பத் நகரில் ஒவ்வொரு வீடாக சென்று குடியுரிமை சட்டம் குறித்த பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் 7 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து குடும்பத்திற்கு இன்று வரை குடியுரிமை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்தியா வந்துள்ள அந்த குடும்பத்தினருக்கு, பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட தினத்தில், பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘நகரிக்தா’ (தமிழில் குடியுரிமை) என பெயர் சூட்டியிருந்தனர்.

அவர்கள் பாஜகவின் ஆதரவு பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, அக்குடும்பத்தினர் சந்தித்து, இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியது குறித்து தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர்,22ம் தேதி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குழந்தைக்கு ‘நகரிக்தா’ என அவர்களது பெற்றோர்கள் பெயரிட்டதை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...