விவேகானந்தர் ஜெயந்தி: மதுக்கடைகளை பூட்டும் போராட்டம் நடத்துவோம்: அர்ஜூன் சம்பத்

சமூக நலன்

விவேகானந்தர் ஜெயந்தி: மதுக்கடைகளை பூட்டும் போராட்டம் நடத்துவோம்: அர்ஜூன் சம்பத்

விவேகானந்தர் ஜெயந்தி: மதுக்கடைகளை பூட்டும் போராட்டம் நடத்துவோம்: அர்ஜூன் சம்பத்

ஜனவரி 12 சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் – தேசிய இளைஞர் தினத்தை விடுமுறையாக்கவும், மதுக்கடைகளை மூடவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

அந்த கோரிக்கையில்:- பாரததேசத்தின் தன்னிகரற்ற இந்துத்துறவி சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும் பலகோடி இந்துக்களின் ஆதர்ஷ புருஷனாகவும் விளங்குகின்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை “தேசிய இளைஞர் தினமாக” கொண்டாடி வருகிறோம். தேசிய இளைஞர்கள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.

முகம்மது நபி, ஏசு கிறிஸ்த்து போன்ற மதத்தலைவர்களின் பிறந்த தினத்தின் போது மது மாமிசக்கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதுபோல விவேகானந்தரின் பிறந்த தினத்தன்று தமிழகம் முழுவதுமுள்ள மது மற்றும் மாமிசக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டுமென்று இந்து மக்கள் கட்சி கேட்டுக்கொள்கின்றது. இந்து மக்கள் கட்சி சார்பிலே விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளை பூட்டும் போராட்டம் வரும் ஜனவரி – 12-ம் தேதி நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.!

Leave your comments here...