முதல்வர் மு.க. ஸ்டாலினின் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை – அண்ணாமலை விமர்சனம்..!

அரசியல்

முதல்வர் மு.க. ஸ்டாலினின் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை – அண்ணாமலை விமர்சனம்..!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை –  அண்ணாமலை விமர்சனம்..!

கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக. கோவையில் சர்வதேச தரத்திலான ஸ்டேடியம் அமைக்கப்போவதாக கூறுவது,  இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டிய ஒன்று”, என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக இது இருக்கும். என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:  “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். 2021-ம் ஆண்டில் அவர் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தோல்வியை உணர்ந்த பிறகு மேலும் வாக்குறுதிகளை வழங்குவதற்கு முன்பு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். திமுகவின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது.

கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக. கோவையில் சர்வதேச தரத்திலான ஸ்டேடியம் அமைக்கப்போவதாக கூறுவது, கோவை மக்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்காக சொல்லப்பட்டுள்ள இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டிய ஒன்று”, என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...