அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 – புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!

அரசியல்

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 – புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 – புதுமைப்பெண் திட்டத்தை நீட்டித்து அரசாணை வெளியீடு!

அரசுப் பள்ளி மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் நீட்டித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 49,664 பேர் பயன்பெறுவர்.

இது தொடர்பாக தமிழக அரசின் சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் விதமாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் வகையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும், இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்றும், கடந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சமூகநலத் துறை ஆணையர் அரசுக்கு அனுப்பிய கருத்துரையில், தற்போது இத்திட்டத்தால் 2 லட்சத்து73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட் டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்தால் அவர்களின் மேற்படிப்பைத் தொடர்ந்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரம் மேலும் அதிகரிக் கும்.

தற்போது சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் 23,560 மாணவிகள் உள்பட அரசு உதவி பெறும் பள்ளிகளில் 49,664 மாணவிகள் மேல்நிலைக்கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தை வரும் கல்வி ஆண்டில், உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிப்பதற்கு கூடுதலாக ரூ.35.37 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அக்கோரிக்கையை ஏற்று ‘புதுமைப் பெண்’ திட்டத்தை 2024-2025-ம் கல்வி ஆண்டு முதல்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படிக்கும் மாணவி களுக்கும் நீட்டித்து, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...