தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு – ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல்..!

இந்தியா

தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு – ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல்..!

தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு – ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல்..!

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16-ம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்பே புதிய அவையை அமைக்க வேண்டும் என்பதால் மக்களவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தார்.

தலைநகர் டெல்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தல் அட்டவணையை அறிவித்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் இருந்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் :- உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது.  தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.  ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான்.  2 ஆண்டுகளாக இந்த தேர்தலுக்கு தயாராகியுள்ளோம்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி,  கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,  மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையிலும் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இதுவரை 800 மாவட்ட ஆட்சியர்களுடன் நேரடியாக பேசி உள்ளேன்.  ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களுக்கு வசதியாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.  1.82 கோடி முதன் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.  மொத்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேர்,  பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேர். இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் உடலில் 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. cVigil என்ற செயலி மூலம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்”.

ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சில மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலமும் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைவதால் அதற்கான தேர்தல் தேதிகளையும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய சட்டசபைகளின் பதவிக்காலம் ஜூன் மாதம் வெவ்வேறு தேதிகளில் முடிகிறது.

இந்த 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள் பின்வருமாறு:

ஆந்திரா

வாக்குப்பதிவு – மே 13, 2024
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4, 2024

அருணாச்சலப் பிரதேசம்

வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4, 2024

சிக்கிம்

வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4, 2024

ஒடிசா

வாக்குப்பதிவு – மே 13, 2024 (28 தொகுதிகள்), மே 20, 2024 (35 தொகுதிகள்), மே 25 (42 தொகுதிகள்), ஜூன் 1 (42 தொகுதிகள்)

வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4, 2024

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

அதன் விவரம்:

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது.

94 தொகுதிகளுக்கான 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.

96 தொகுதிகளுக்கான 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது.

57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7 ஆம் கட்டம் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரே கட்ட தேர்தலுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழகம்:

வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20
வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27
வேட்புமனு பரிசீலனை – மார்ச் 28
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு- ஏப்ரல் 19

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Leave your comments here...