ஆபாச காட்சிகள ஒளிபரப்பு.. 18 ஆபாச ஓடிடி தளங்கள் முடக்கம்- மத்திய அரசுஅதிரடி நடவடிக்கை..!

இந்தியா

ஆபாச காட்சிகள ஒளிபரப்பு.. 18 ஆபாச ஓடிடி தளங்கள் முடக்கம்- மத்திய அரசுஅதிரடி நடவடிக்கை..!

ஆபாச காட்சிகள ஒளிபரப்பு.. 18 ஆபாச ஓடிடி தளங்கள் முடக்கம்- மத்திய அரசுஅதிரடி  நடவடிக்கை..!

மோசமான, ஆபாசமான உள்ளடங்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

மத்திய அரசின் கீழ்  செயல்படும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆபாச காட்சிகளை வெளியிடும் தளங்களை கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், அன்கட் அடா, ட்ரீம்ஸ் பிலிம்ஸ் மற்றும் பிரைம் பிளே போன்ற 18 ஓடிடி தளங்கள் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பு செய்ததற்காக தடை செய்துள்ளது. இது மட்டுமின்றி இந்த ஓடிடி தளங்களுடன் தொடர்புடைய 19 வலைத்தளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67 மற்றும் 67 ஏ, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 292 மற்றும் பெண்களின் அநாகரீகமான பிரதிநிதித்துவம் (தடை) சட்டம், 1986 இன் பிரிவு 4 ஆகியவற்றை முதன்மையாக மீறியதற்காக ஓடிடி தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஓடிடி தளங்களில் இந்த தடைக்கான காரணத்தை விளக்கிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், “இந்த தளங்களில் ஹோஸ்ட் செய்யப்பட்ட காட்சிகளில் கணிசமான பகுதி ஆபாசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும், பெண்களை இழிவான முறையில் சித்தரித்தது கண்டறியப்பட்டது குறித்தும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.   இந்த தளங்களில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருத்தமற்ற சூழல்களில் நிர்வாணம் மற்றும் பாலியல் செயல்களை சித்தரித்தது காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காட்சிகளில் பாலியல் அவதூறுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், எந்தவொரு கருப்பொருள் அல்லது சமூக பொருத்தமும் இல்லாத ஆபாச மற்றும் பாலியல் வெளிப்படையான காட்சி அதிகம் உள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் கணக்குகளூம் முடக்கம்!

பேஸ்புக் கணக்குகள், 17 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 16 எக்ஸ் கணக்குகள் மற்றும் 12 யூடியூப் கணக்குகளுக்கான அணுகலையும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது.

18 ஓடிடி செயலிகள் குறித்த விவரம்!

  • Voovi
  • Yessma
  • Uncut Adda
  • Tri Flicks
  • X Prime
  • Neon X VIP
  • Besharams
  • Hunters
  • Rabbit
  • Xtramood
  • Nuefliks
  • MoodX
  • Mojflix
  • Hot Shots VIP
  • Fugi
  • Chikooflix
  • Prime Play

Leave your comments here...