உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி – விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

இந்தியா

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி – விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட  அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி –  விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும்,  வெற்றிகரமாக சோதனை செய்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தை தெரிவித்தார்.

மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.இந்த அக்னி-5 ஏவுகணை பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாகத் தகவல் வெளியானது. மாலை 5.30 மணியளவில் அவர் உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி, தனது X தள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது :

“MIRV தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இலக்கை தாக்கிவிட்டு திரும்பும் அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து”

இவ்வாறு பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, அக்னி 5 ஏவுகணை MIRVed தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இந்த Multiple Independently-targetable Reentry Vehicles என்பது முதலில் 1960களில் தயார் செய்யப்பட்ட ஒரு ராணுவ தொழில்நுட்பமாகும். ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை நோக்கி அணு ஆயுதங்களை ஏவ அனுமதிப்பதே இதன் திட்டமாகும். பொதுவாக வழக்கமான ஏவுகணையில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணையில் பல்வேறு குண்டுகளை எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...