ராஜஸ்தான் மருத்துவமனையில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்தது விவகாரம் : அறிக்கை அளிக்க அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!

இந்தியா

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோட்டா அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் குறைபாடு காரணமாகக் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தானின் கோடா மருத்துவமனையில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக நான்கு வாரத்துக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Leave your comments here...