ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி- மு.க.ஸ்டாலின் அறிக்கை 

அரசியல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி- மு.க.ஸ்டாலின் அறிக்கை 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி- மு.க.ஸ்டாலின் அறிக்கை 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27,30-ந்தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சுமார் 77 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க.வின் அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்ச அணுகுமுறையை மீறி ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  அமைச்சர்கள் மாவட்டங்களில் முகாமிட்டும், பணத்தை வாரியிறைத்தும் அ.தி.மு.க. பின்னடைவை சந்தித்துள்ளது

மேலும் நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி இருந்தால் தி.மு.க. இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும். தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave your comments here...