பிராண பிரதிஷ்டை பூஜை – அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம்..!

இந்தியா

பிராண பிரதிஷ்டை பூஜை – அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம்..!

பிராண பிரதிஷ்டை பூஜை – அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம்..!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடந்தேறியது. ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்துள்ளனர். அதோடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகவுடா, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர், டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம், பாபா யோகி ராம்தேவ், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, சுனில் பாரதி மிட்டல், நடிகர்கள் அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன், கங்கனா ரனாவத், ரஜினிகாந்த், விவேக் ஓபராய், தனுஷ், ஹேமமாலினி, மாதுரி தீக்ஷித், ரன்பீர் கபூர், ஆலியா பட், சிரஞ்சீவி, ராம் சரண், அனுபம் கெர், இந்தி கவிஞர் குமார் விஸ்வாஸ், பாடகர் சோனு நிகாம், முன்னாள் இன்னாள் விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ், சாய்னா நேவால், அணில் கும்ப்ளே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அயோத்தி வந்துளளனர். முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி வரலாறு காணாத கோலாகலத்தை இன்று கண்டது.

விழாவின் நாயகரான ஸ்ரீ பாலராமரை சிறப்பிக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அயோத்திக்கு வந்தார். காலை 10.30 மணிக்கு மேல் அவரது விமானம் அயோத்தி விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தளத்தில் பிரதமர் மோடி சென்று இறங்கினார். பிறகு அங்கிருந்து கார் மூலம் அயோத்தி கோவிலுக்கு 12.05 மணிக்கு வந்தார்.

சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கின. பிரதமர் மோடி முன்னிலையில் அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசன் தம்பதி உள்பட 14 தம்பதிகள் ராமர் சிலை பிரதிஷ்டை சடங்குகளை முன்னின்று நடத்தினார்கள்.கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் குறித்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. திட்டமிட்டபடி 84 வினாடிகள் இந்த பூஜை நடந்தது. அப்போது 121 வேதவிற்பனர்கள் பிராண பிரதிஷ்டைக்கான மந்திரங்களை ஓதினார்கள்.

இதன் மூலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம் இன்று முறைப்படி தொடங்கி உள்ளது.ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ஆலயத்தில் திரண்டிருந்த சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல இடங்களில் அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது.

வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனைத் தொடர்ந்து பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது. கோயில் அர்ச்சகர் வழிகாட்டுதலின் கீழ் பிரதமர் மோடி, பல்வேறு பூஜைகளை செய்தார். குழந்தை ராமரை தரிசித்த பிரதமர் உள்ளிட்டோர் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பால ராமர் சிலைக்கு முதல்முறையாக பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். ராமர் சிலைக்கு தேங்காய், பழங்கள் படைத்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மலர்கள், தங்க ஆபரணங்களால் பால ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...