ஆதார் கார்டு இனி பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது – EPFO அமைப்பு.

இந்தியா

ஆதார் கார்டு இனி பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது – EPFO அமைப்பு.

ஆதார் கார்டு இனி பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது – EPFO அமைப்பு.

பிறப்பு சான்றாக (DoB) ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவு அளித்துள்ளது. ஆதார் சட்டம் 2016-ன் கீழ், தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும்போது, பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற வலியுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரை DoB இன் சான்றாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பிறந்த தேதியில் திருத்தம் செய்வதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் அகற்றப்படுகிறது.

நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில் ,குறிப்பிட்ட தொகை நமது பிஎப் கணக்கிற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை இப்படி மாதம் மாதம் நமது பிஎப் கணக்கில் சேரும்.இபிஎப்ஓ பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில் நம்முடைய பிஎப் கணக்கை குறிப்பிட்டு நாம் நம்முடைய தொகை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த பிஎப் கணக்கில் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.

தேவைப்படும் பட்சத்தில் இடைப்பட்ட நேரத்தில் கூட இந்த பிஎப் தொகையை எடுத்துக்கொள்ள முடியும். அவசர தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு இந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். பிஎப் போக ரிட்டயர்மெண்ட் தொகையும் இதேபோல் வழங்கப்படும். ஆனால் அதை குறிப்பிட்ட வயதிற்கே பின்பே எடுக்க முடியும்.

இந்த நிலையில்தான் இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது. அதன்படி இனி பிறப்பு ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கொடுக்க கூடாது. அதை கொடுத்துள்ளவர்கள் உடனே பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் மட்டுமே பிறப்பு சான்றாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. இன்று முதல் பல்வேறு சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாகச் செயல்படும். ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.

மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் மூலம் அமலுக்கு வருகிறது.

சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.

Leave your comments here...