இந்திய – வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுக்க BSF-க்கு உதவும் தேனீக்கள்…!

இந்தியா

இந்திய – வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுக்க BSF-க்கு உதவும் தேனீக்கள்…!

இந்திய – வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுக்க BSF-க்கு உதவும் தேனீக்கள்…!

இந்திய – வங்கதேச எல்லையில் ஊடுருவல்காரர்களை விரட்டும் வகையில், அங்கு தேனீக்கள் வளர்க்கப்பட்டு வருவதாக எல்லைப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியானது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்குவங்கம், பீகார் மாநில எல்லைகளை கொண்டுள்ள வங்கதேசத்தில் இருந்து, அவ்வப்போது சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர்.

குறிப்பிட்ட பகுதிகள் முள்வேலி அமைக்கப்பட்டு தடுக்கப்பட்டாலும், திறந்தவெளி பகுதிகளில் ஊடுருவல் இருந்து வருகிறது. அதனை தடுப்பதற்காக இந்தியா – வங்கதேச எல்லையில் அமைந்துள்ள ​சாப்ரா, பான்பூர், கடிபூர், அஞ்சாஸ், கிருஷ்ணகஞ்ச் போன்ற எல்லைப் பகுதியில் முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருந்தும் அதனை தாண்டி வங்கதேச கும்பல் இந்தியாவிற்குள் ஊடுருவி வருவதால், அதனை கட்டுப்படுத்த சில இடங்களில் தேனீக்கள் கூடுகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகளை தடுக்கும் வகையில், ஆங்காங்கே தேனீக்கள் வளர்க்கப்படுகிறது. அதற்காக தேனீப் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளை பராமரிக்கும் பொறுப்பை உள்ளூர் மக்களே ஏற்றுள்ளனர். தேன் சேகரிக்கும் பொறுப்பையும் அவர்களே மேற்கொள்வார்கள்.

இதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தின் மூலம் ஊடுருவல் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இந்தியா-வங்கதேச எல்லையில் 200 தேனீ வளர்ப்பு பெட்டிகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றன.

Leave your comments here...