இடைத்தரகர்கள் மூலம் என்னையே மிரட்டினர் – சபாநாயகர் அப்பாவு

அரசியல்

இடைத்தரகர்கள் மூலம் என்னையே மிரட்டினர் – சபாநாயகர் அப்பாவு

இடைத்தரகர்கள் மூலம் என்னையே மிரட்டினர் –  சபாநாயகர் அப்பாவு

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர். மத்திய அரசின் பெயரை சொல்லி என்னை இடைத்தரகர்கள் மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- இடைத்தரகர்கள் மூலம் குறிப்பிட்ட தொகை கேட்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. மத்திய அரசின் பெயரை சொல்லி என்னை இடைத்தரகர்கள் என்னையும் மிரட்டியுள்ளனர். என்னை தலைமறைவாக இருக்க கூறினார்கள், செல்போன் எண்ணை மாற்ற சொன்னார்கள். பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறையின் இடைத்தரகர்கள் மிரட்டல் விடுகிறார்கள். அதுவும், அரசியவாதி, தொழிலாலதிபர்களை குறிவைத்து மிரட்டல் விடுகிறார்கள். இடைத்தரகர்கள் மூலம் பணம் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது.

மிரட்டி குறிப்பிட்ட தொகையை வாங்க அமலாத்துறையின் இடைத்தரகர்கள் முயல்வதாக தகவல் கிடைக்கிறது. அந்தவகையில், மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் இடைத்தரகர்களை வைத்து கடந்த 3 மாதங்களாக என்னையே மிரட்டி இருக்கிறார்கள். என்னை குறிவைத்தார்கள், நான் அதற்கு உடன்படவில்லை.

இடைத்தரகர்களை வைத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ அதிகாரிகள் உருட்டல், மிரட்டல் செய்கின்றனர். இதனால் என்னை போன்றே பலருக்கும் மத்திய அமைப்புகளின் இடைத்தரகர்கள் மூலம் மிரட்டும் வந்துள்ளது என திண்டுக்கல்லில் லஞ்ச பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது தொடர்பான கேள்விகளுக்கு அப்பாவு இவ்வாறு பரபரப்பான குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட வேண்டும். உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். மதச்சார்பின்மை நாடு என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் மதச்சார்புடைய நாடு இந்தியா என ஆளுநர் பேசுகிறார் எனவும் தெரிவித்தார்.

Leave your comments here...