70 பேர் பலியான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை..!

இந்தியா

70 பேர் பலியான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை..!

70 பேர் பலியான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2008 ம் ஆண்டு மே 13ம் தேதி, சௌக் கான்டா, சந்த்போல் கேட், படி சௌபாத், சோட்டி சௌபாத், திரிபோலியா கேட், ஜோரி பஜாா், சங்கனேரி கேட் இடங்களில் அடுத்தடுத்து எட்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, இந்த கோர நிகழ்வில், 70 பேர் பலியாகினர்; 185 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பயங்கரவாத அமைப்பான, இந்திய முஜாகிதீன் உடன் தொடர்புடைய, 5 பேரை கைது செய்தனர். இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக முகமது சய்ஃப், முகமது சா்வாா் ஆஷ்மி, முகமது சல்மான், சய்ஃப்பூா் ரஹ்மான் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்பதாக காவல் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிய குற்றச்சாட்டில் ஷாபாஸ் உசேன் என்பவா் கடந்த 2008-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தாா் அவரின் குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, விடுதலை செய்தது. இவா்கள் தவிர, இந்த குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பேரில் 3 போ் தலைமறைவாக உள்ளனா்.

அதில் 2 போ் கடந்த 2008-ஆம் ஆண்டு தில்லியில் பட்லா ஹவுசில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவர்களின் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 302 (கொலை), 307(கொலை முயற்சி), 324(கொடூரமான ஆயுதங்கள் மூலம் தீங்கு விளைவிப்பது), 120-பி (சதி திட்டம்), தேசதுரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், முகமது சயிப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சைபுர் ரஹ்மான் ஆகிய நான்கு பேருக்கான தண்டனை விவரத்தை ஜெய்ப்பூர் கோர்ட் இன்று அறிவித்துள்ளது. அதில், 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave your comments here...