பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகள் பிரதமர் மோடியை கொல்ல திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை..!

இந்தியா

பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகள் பிரதமர் மோடியை கொல்ல திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை..!

பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகள் பிரதமர் மோடியை கொல்ல திட்டம்:  உளவுத்துறை எச்சரிக்கை..!

தலைநகர் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் வருகிற 22-ந்தேதி பா.ஜனதா சார்பில் பிரமாண்ட பேரணி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிலையில் பேரணியில் பங்கேற்கும் மோடியை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

பிரதமர் மோடி பதவியேற்ற பின்பு நாடு முழுவதும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி அளித்த அயோத்தி தீர்ப்பு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியது போன்றவை சமீபத்திய அச்சுறுத்தலுக்கு காரணமாக இருக்கலாம் என உளவுத்துறை சுட்டிக் காட்டியுள்ளது.

இதுதொடர்பான தகவலை பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) மற்றும் டெல்லி போலீசாரிடமும் வழங்கியுள்ள உளவுத்துறை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதமர்கள், பத்திரிகையாளர்கள், பாஜக தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரள வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும் அந்த கூட்டத்தில் வைத்து பிரதமர் மோடியை கொல்ல, ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் அணி திரட்டப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான ‘புளு புக்கில்’ இடம்பெற்றுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்” என்று உளவுத்துறை கூறியுள்ளது.

 

Leave your comments here...