‘ஏஐ டீப் ஃபேக்’ வீடியோக்கள் ஆபத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்தியா

‘ஏஐ டீப் ஃபேக்’ வீடியோக்கள் ஆபத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி எச்சரிக்கை

‘ஏஐ டீப் ஃபேக்’ வீடியோக்கள் ஆபத்தை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி எச்சரிக்கை

நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன”  என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா உட்பட சில இந்தி நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட முகங்களுடன் கூடிய போலியான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியது. ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் பீகார் வாலிபர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில் ,‘‘ பலதரப்பட்ட சமூகத்தை கொண்ட இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) மற்றும் டீப் ஃபேக் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு சரிபார்ப்புக்கு நேரமிருக்காது. ஒரு சிறிய தீ சமூகத்தில் மிக பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும்.சமீபத்தில் ஒரு கர்பா நிகழ்ச்சியில் நான் நடனம் ஆடும் வீடியோவை பார்த்தேன்.அந்த வீடியோ எவ்வளவு நன்றாக இருக்கிறது என ஆச்சரியப்பட்டேன்.

இது போன்ற பல ஆன்லைன் வீடியோக்கள் உள்ளன. டீப் ஃபேக்கின் அச்சுறுத்தல் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இது அனைவருக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். டீப்ஃபேக்குகள் தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மற்றும் பாதிப்பு குறித்து மக்களிடம் மீடியாக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவேன் என்று அறிவித்தது வெறும் வார்த்தைகள் அல்ல,அது நிஜமான உண்மையாகும். உள்ளூர் பொருட்கள் தயாரிப்பு குறித்த முயற்சி மக்களிடையே பெரிய ஆதரவை உருவாக்கியுள்ளது’’ என்றார்.

இதுபோன்ற போலி வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த வாரம் எச்சரித்தார். “இதுபோன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறி இருந்தார். இந்த சட்டப்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...