லைசன்ஸ் இல்லாமல் R15 பைக்…. விதியை மீறிய நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம் – போக்குவரத்து காவல் துறை அதிரடி..!

தமிழகம்

லைசன்ஸ் இல்லாமல் R15 பைக்…. விதியை மீறிய நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம் – போக்குவரத்து காவல் துறை அதிரடி..!

லைசன்ஸ் இல்லாமல் R15 பைக்…. விதியை மீறிய நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம் – போக்குவரத்து காவல் துறை அதிரடி..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ததை அடுத்து, தனுஷ் தனித்து வசித்து வருகிறார்.இந்நிலையில், இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் தனுஷின் 17 வயது மகனுக்கு அபராதம் விதித்து சென்னை பெருநகர காவல் போக்குவரத்து காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

நடிகர் தனுஷுன் மூத்த மகன் யாத்ரா ஆர்15 பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணயைத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவில் அவர் பைக் ஓட்ட அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக்கொடுக்கிறார்.இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் போட்டோ வீடியோ எடுக்க, அந்த உதவியாளர் யாரும் போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறி வருகிறார். ஆனாலும் பொதுமக்கள் எடுத்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.

அவருக்கு இன்னும் 18 வயதே ஆகவில்லை. அதற்குள் பைக் ஓட்ட பழகுவது தவறானது. அதுவும் ஆர்15 பைக் ஓட்டுவது மிகவும் தவறு. அப்படி அவர் ஓட்டி பழக வேண்டும் என்றால் பாதுகாப்பான இடத்தில் தான் ஓட்ட வேண்டும். ஆனால் லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்ட பழக்குவது குற்றம் என்றும், இதை தனுஷ் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் தனுஷின் 17 வயது மகனுக்கு அபராதம் விதித்து சென்னை பெருநகர காவல் போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், தலைகவசம் அணியாமலும் ஆர் 15 ரக பைக்கை ஓட்டியதாக போலீசார் அபராதம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave your comments here...