அயோத்தி ராமர் கோவிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடை – உள்துறை அமைச்சகம் அனுமதி

இந்தியா

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடை – உள்துறை அமைச்சகம் அனுமதி

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடை – உள்துறை அமைச்சகம் அனுமதி

ராமர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்மபூமியில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய், நேற்று ‘எக்ஸ்’ தளத்தில் வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-‘ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குபடுத்தல் சட்டப்படி நன்கொடைகள் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோன்ற நன்கொடைகளை, டெல்லி சன்சத் மார்க்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் கணக்குக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்’.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று தளங்கள் கொண்ட ராமர் கோவிலின் தரைத்தள கட்டுமானம் வருகிற டிசம்பர் இறுதியில் முடிவடையும். குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி நடைபெறும் என ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும், ஜனவரி 20- 24-ந் தேதிக்கு இடையில் நடக்கும் விக்கிரக பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார். அதற்கான தேதியை பிரதமர் அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave your comments here...