ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது – இஸ்ரோ தகவல்

இந்தியா

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது – இஸ்ரோ தகவல்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது – இஸ்ரோ தகவல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலம், கடந்த மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். விண்கலம் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்பட்டது. விண்கலம் தற்போது பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விலகி வெற்றிகரமாக ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளத்தில், ” ஆதித்யா விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் கடந்த 6ல் 16 விநாடிகள் வெற்றிகரமாக நடந்தன. ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாகவும் சரியான பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது.

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல் 1 விண்கலம் திட்டமிட்டப்படி பயணிக்கிறது. ஆதித்யா-எல்1 தொடர்ந்து முன்னோக்கி நகர்வதால், காந்த புலமையை அளவிடும் கருவி சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படும்” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave your comments here...