திடீர் “பல்டி” அடித்த கனடா… மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ… இந்தியாவுடன் ஆக்கபூர்வமான உறவை வலுப்படுத்தவே விருப்பம் – பின்னணியில் என்ன நடந்தது?

இந்தியாஉலகம்

இந்தியாவுடன் பிரச்சனையை அதிகரிக்க விரும்பவில்லை, ஆக்கபூர்வமான உறவை வலுப்படுத்த விரும்புவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்தியா-கனடா இடையேயான மோதல் என்பது உச்சம் தொட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடாவுக்கு எதிராக இந்தியா அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 40 தூதர்களை வெளியேறும்படி இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. கூறியுள்ள நிலையில் கனடா ஷாக்கான நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பணிந்துள்ளார்.

இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 62 பேரும் 41 பேரை வெளியேற்ற இந்தியா திட்டமிட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ் இதழ் தகவல் வெளியிட்ட நிலையில் கனடா பிரதமர் ட்ரூடோவின் கருத்து வெளியாகியுள்ளது. எனினும் 41 கனட அதிகாரிகளை வெளியேற்ற இந்தியா திட்டமிட்டுள்ள தகவலை அவர் உறுதிப்படுத்தப்பட வில்லை.

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய ஏஜென்சிகளின் பங்கு இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். அது அபத்தமானது என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஒட்டாவா நகரில் செய்தியாளர்களை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் கனடாவின் உறவு சவாலான சூழலை கடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்தியாவுடன் பிரச்சனையை பெரிதாக்க விரும்பவில்லை என்ற அவர் ஆக்கபூர்வமான உறவை மேம்படுத்தவே விரும்புவதாகவும் கூறினார்.

கனடா மக்களுக்கு உதவும் வகையில் பொறுப்புடன் செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன். அதோடு கனடா மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் எங்களின் தூதர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன்” என இறங்கி வந்துள்ளார்.

Leave your comments here...