‘வந்தே பாரத்’ ரயில் சென்ற தண்டவாளத்தில் இரும்பு ராடு, கற்கள் – பெரும் விபத்து தவிர்ப்பு..!

இந்தியா

‘வந்தே பாரத்’ ரயில் சென்ற தண்டவாளத்தில் இரும்பு ராடு, கற்கள் – பெரும் விபத்து தவிர்ப்பு..!

‘வந்தே பாரத்’ ரயில் சென்ற தண்டவாளத்தில் இரும்பு ராடு, கற்கள் – பெரும் விபத்து  தவிர்ப்பு..!

ஜெய்ப்பூர்: வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த தண்டவாளத்தில், கற்கள் மற்றும் இரும்பு ராடுகளை வைத்த நபர்கள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் – ஜெய்ப்பூர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சித்தோர்கர் மாவட்டம் கங்கர் – சோனியானா நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியின் தண்டவாளத்தில் இரும்புத் துண்டு ராடுகள், கற்கள் போட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த ரயிலின் லோகோ பைலட், உடனடியாக ரயிலை நிறுத்தினார். தகவலறிந்த ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து கற்களையும், இரும்பு ராடுகளையும் அப்புறப்படுத்தினர்.

அதன்பின் அந்த ரயில் புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் தொடர்பாக கங்கர் காவல் நிலைய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். ரயிலின் லோகோ பைலட் உரிய நேரத்தில் செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்

Leave your comments here...