நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வளர்ச்சி அடைய வேண்டும் – சத்தீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

அரசியல்

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வளர்ச்சி அடைய வேண்டும் – சத்தீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வளர்ச்சி அடைய வேண்டும் – சத்தீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் வளர்ச்சியடையும் போதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும். இதனால் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வளர்ச்சி அடைய வேண்டும் என சத்தீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.26ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர், எஃகு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் ஜக்தல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு எஃகு ஆலையைக் கைப்பற்ற விரும்புகிறார்கள். இதன் மூலம் நிறைய சம்பாதிக்க விரும்புகிறார்கள். எஃகு ஆலை பஸ்தார் மாவட்ட மக்களுக்கு சொந்தமானது.மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் வளர்ச்சியடையும் போதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவு நனவாகும்.

இதனால் நாட்டின் ஒவ்வொரு மூலையும் வளர்ச்சி அடைய வேண்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், உள்கட்டமைப்புக்கான செலவினத்தை, 10 லட்சம் கோடி ரூபாயாக, எங்கள் அரசு உயர்த்தியதற்கு இதுவே காரணம். தேசத்தை தன்னிறைவாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எஃகு ஆலை பஸ்தார் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். புதிய எஃகு ஆலையானது மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave your comments here...