4 மாதம் வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடாது – மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை கருத்து

இந்தியா

4 மாதம் வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடாது – மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை கருத்து

4 மாதம் வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடாது – மகாராஷ்டிரா அமைச்சர்  சர்ச்சை கருத்து

வெங்காய விலை அதிகம் என கருதினால் மக்கள் அதனை சாப்பிடாமல் இருக்கட்டும், 4 மாதங்களுக்கு வெங்காயத்தை உணவில் சேர்க்காமல் இருந்தால் உடல் நலம் ஒன்றும் பாதித்துவிடாது’ என மஹாராஷ்டிர அமைச்சர் தாதா பூஸ் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் கடந்த ஓரிரு மாதங்களாக நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பலரும் அவதிப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது.இந்த நிலையில் சமீப காலமாக வெங்காயத்தின் விலையும் ஏற்றம் காண்கிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு வினியோகத்தை அதிகரிக்கவுமே ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்க முடிவு செய்ததாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மஹாராஷ்டிர அமைச்சர் தாதா பூஸ் கூறியதாவது: வெங்காய விலை உயர்வாக கருதினால் மக்கள் அதனை சாப்பிடாமல் இருக்கட்டும், அடுத்த 2 முதல் 4 மாதங்களுக்கு வெங்காயத்தை உணவில் சேர்க்காமல் இருந்தால் உடல் நலம் ஒன்றும் பாதித்துவிடாது.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களை பயன்படுத்தும் போது, ரூ.10, 20 அதிகமாக கொடுத்து வாங்குவதில் தப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சரின் இந்த கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave your comments here...