ஜி-20 உச்சி மாநாடு – அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகை

இந்தியாஉலகம்

ஜி-20 உச்சி மாநாடு – அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகை

ஜி-20 உச்சி மாநாடு – அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகை

ஜி.20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது.

ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் அவர் 10-ந்தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார். ஜோபைடன் தனது இந்திய பயணத்தில் பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது

கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்றார். அதிபர் ஜோபைடனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஜோபைடன் ஏற்று கொண்டார்.

இந்தியாவில் ஜி.20 மாநாட்டில் பங்கேற்பதை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்கி இருப்பதாக ஜோபைடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...