சிபிஐ வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டு…. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை ஏன் வெளியிடவில்லை? அண்ணாமலைக்கு சீமான் சரமாரி கேள்வி!

அரசியல்

சிபிஐ வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டு…. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை ஏன் வெளியிடவில்லை? அண்ணாமலைக்கு சீமான் சரமாரி கேள்வி!

சிபிஐ வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டு…. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை ஏன் வெளியிடவில்லை? அண்ணாமலைக்கு சீமான் சரமாரி கேள்வி!

அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளபோது அவர்களுடைய சொத்துப்பட்டியலை ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலையின் நடை பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், நடைபயணம் மேற்கொண்டால் ஏதாவது தாக்கம் ஏற்படும் என பாஜக நம்புகிறது, எல்லா தலைவர்களும் இப்படி நடைபயணம் மேற்கொள்வது வழக்கமாகி விட்டது, திராவிட மாடல் குஜராத் மாடல் போல் நடைபயணம் என்பது ஓல்டு மாடல். இதற்கு முன்பு வைகோ குறுக்க மறுக்க நடந்து முடித்து விட்டார், ராகுல் காந்தி நடந்து முடித்துவிட்டார் எனத் தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை ஆளுநர் ஆர்,என்.ரவியை சந்திப்பது குறித்தும் திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிடுவது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்குகளும் ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளபோது அவர்களுடைய சொத்துப்பட்டியலை ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை? அண்ணாமலை நேர்மையானவர் என்றால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டியதுதானே? அதிமுக கூட்டணியில் இருப்பதால், அவர்களை பாஜக புனிதமாக்குகிறது. திமுகவை பற்றி மட்டும் அண்ணாமலை பேசுவது அரசியல் லாபத்திற்காகதான் என விமர்சித்தார்.

மேலும் பேசிய சீமான், கோடநாடு கொலை வழக்கு குறித்து அண்ணாமலை ஏன் பேசுவதில்லை? 24 மணி நேரத்தில் ஒரு நிமிடம் கூட மின்சாரம் துண்டிக்கப்படாத கோடநாட்டில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது எப்படி? 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதைப்பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சியிலும் மணிப்பூரில் ஏற்பட்டது போன்ற கலவரங்கள் நடைபெற்றன. குஜராத் கலவரத்தை நியாயப்படுத்தி அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுகவினர் பேசினர். இப்போது எதிராக பேசுகின்றனர். தற்போது மணிப்பூர் கலவரத்தை வைத்து காங்கிரஸ் புனிதர் வேடம் போடுகிறது. மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை ஆளும் பாஜக அரசு விரும்புகிறது எனத் தெரிவித்தார்.

சந்திரயான் விண்கலம் பற்றி மோடி பாராட்டி பேசி வருகிறார். அங்கே குடியேற நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார் இந்துக்களையா? முஸ்லிம்களையா? கிறிஸ்தவர்களையா என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கூறவேண்டும். மீண்டும் பிரதமராக மோடி வந்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும், இந்தியாவில் யாரும் வாழ முடியாது என்று தெரிவித்தார்.

Leave your comments here...