இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முதன்முறையாக ரூ.6.97 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம் – பிரதமர் மோடி பெருமிதம்..!

இந்தியாஉலகம்

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முதன்முறையாக ரூ.6.97 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம் – பிரதமர் மோடி பெருமிதம்..!

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முதன்முறையாக ரூ.6.97 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம் – பிரதமர் மோடி பெருமிதம்..!

பிரான்ஸ் நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்று உள்ளார். பிரதமர் மோடி அபுதாபி நகரை சென்றடைந்ததும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புர்ஜ் கலிபா என்ற உயர்ந்த கட்டிடத்தில் இந்திய தேசிய கொடியின் வர்ணம் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர் அபுதாபி நகரில், இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.

அவரது இந்த பயணத்தில் சி.ஓ.பி.28 எனப்படும் பருவநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் தலைவர் சுல்தான் பின் அகமது அல் ஜாபரை இன்று சந்தித்து பேசினார். இந்த முறை, இந்த உச்சி மாநாட்டை ஐக்கிய அரபு அமீரகம் தலைமையேற்று நடத்துகிறது.


இந்த சந்திப்பில், பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் முயற்சிகள் மற்றும் தொடக்க நடவடிக்கைகள் பற்றி பேசப்படும் என்று பிரதமர் மோடி சுட்டி காட்டினார். அந்நாட்டின் தலைமைத்துவத்திற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று அல் ஜாபருடனான சந்திப்பில் அவர் உறுதி கூறியுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் மோடி கூறும்போது, உங்களது இந்த அழைப்புக்காக நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு, எதிர்பார்த்து எப்போதும் காத்திருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள பருவநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்து உள்ளேன் என அவர் கூறியுள்ளார். நம்முடைய இருதரப்பு ஒப்பந்தம் 20 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து உள்ளது.

முதன்முறையாக நாம் ரூ.6.97 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் செய்து சாதனை படைத்து உள்ளோம். விரைவில் ரூ.8.2 லட்சம் மதிப்புக்கான இலக்கை நாம் அடைவோம். இதுபற்றி நாம் முடிவு மேற்கொண்டால், இந்த மைல்கல்லை ஜி-20 மாநாட்டுக்கு முன்பே கடந்து விடுவோம் என்று அபுதாபியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave your comments here...