தமிழகத்தில் ஸ்டாலின் அரசு ஊழல் செய்வதை இந்தியா பார்த்து கொண்டு இருக்கிறது – சென்னையில் ராஜ்நாத் சிங் பேச்சு..!

அரசியல்

தமிழகத்தில் ஸ்டாலின் அரசு ஊழல் செய்வதை இந்தியா பார்த்து கொண்டு இருக்கிறது – சென்னையில் ராஜ்நாத் சிங் பேச்சு..!

தமிழகத்தில் ஸ்டாலின் அரசு ஊழல் செய்வதை இந்தியா பார்த்து கொண்டு இருக்கிறது – சென்னையில் ராஜ்நாத் சிங் பேச்சு..!

தமிழகத்தில் திமுக அரசு ஊழல் அதிகம் செய்கிறது. தமிழகத்தில் ஒரே ஒரு முறை பாஜக., வை ஆட்சியில் அமர்த்துங்கள் ஊழலற்ற ஆட்சியை தருகிறோம் என சென்னையில் நடந்த பாஜக., சாதனை விளக்கக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

சென்னை தாம்பரத்தில் நடந்த பாஜ., ஆட்சியின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழில் பேச எனக்கு தெரியாததால் ஹிந்தி மொழிகளில் பேசுகிறேன். சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது.

ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியின் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. புதிய பார்லிமென்டில் செங்கோல் நிறுவப்பட்டது தமிழகத்திற்கு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. இதனால் செங்கோல் பெருமை அனைவருக்கும் தெரிய வந்தது. தமிழகத்தின் பெருமையான செங்கோலை பார்லிமென்டில் நிறுவியதற்கு பிரதமருக்கு நன்றி கூறுவோம்.


கோவிட் காலத்தில், பொருளாதாரத்தை முடங்க விடாமல் காப்பாற்றியவர் பிரதமர் மோடி. சென்னையில் உங்கள் முன் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் உலகின் பழமையான மொழி. தமிழகம் திருவள்ளுவர் உள்ளிட்ட அறிஞர்களை கொண்ட பூமி. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் தாய். எந்த நாட்டிலும் இந்தியா அத்துமீறாது.

இந்தியாவை எந்த நாடும் சீண்டினால் சும்மா விடாது. திருவள்ளுவர் பிறந்த சிறப்பு மிக்க தமிழகத்திற்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி. 2047 ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும் என கணித்துள்ளனர். இந்தியாவில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது.

பிரதமர் மோடிக்கு திருக்குறள் வழிகாட்டும் நூலாக திகழ்கிறது. இந்தியா என்ன சொல்லப்போகிறது என உலக நாடுகள் காத்துக்கிடக்கின்றன. தொலை பேசி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது.தமிழகத்தில் ஸ்டாலின் அரசு ஊழல் செய்வதை இந்தியா பார்த்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு ஊழல் அதிகம் செய்கிறது. தமிழகத்தில் ஒரே ஒரு முறை பாஜ., வை ஆட்சியில் அமர்த்துங்கள் ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜ, மக்கள் வளர்ச்சிக்காக கட்சி நடத்துக்கிறது. பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்க நடத்துகின்றன.

பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா. தற்போது பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியிலில் முதல் 25 நாடுகளில் ஒன்றாக முன்னேறி உள்ளது. திமுகவின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். அரசியல் காழ்புணர்ச்சியால் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டு உள்ளார் என்கிறார் தமிழக முதல்வர்.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்:- தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். சமூகவலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட, பாஜ., சேர்ந்த எஸ்.ஜி சூர்யாவை கைது செய்தது எதற்கு என ஸ்டாலின் அரசிடம் கேட்கிறேன். கூட்டணி தர்மத்தின் படி அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக இருக்கிறோம்.ஏழைகளின் வாழ்விற்காக உழைத்த ஜெயலலிதா மீது பாஜ.,வினருக்கு மரியாதை உண்டு. அயோத்தியில் ராமர் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜ.,வினர் யாரும் குற்றம் செய்தால் அவர்களது இடம் சிறையாக தான் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...