சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் அமித்ஷா!

இந்தியா

சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் அமித்ஷா!

சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் அமித்ஷா!

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது. இந்த புயல் மாண்ட்வி கராச்சி இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் மழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரையை ஒட்டி, மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசும் காற்றின் வேகம் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என்றும், ஜூன் 14 ஆம் தேதி காலை காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி கட்ச்,தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜுனகர் மற்றும் மோர்பி மாவட்டங்களில் மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் பிபர்ஜாய் புயலை எதிர்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், புயலால் பாதிப்படைய வாய்ப்புள்ள 8 மாவட்டங்களின் எம்.பி.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: “சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, புனே, அகமதாபாத் ஆகிய 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக 2500 கோடி ரூபாயும், மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் 5,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.825 கோடி தேசிய நிலச்சரிவு அபாயக் குறைப்புத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

Leave your comments here...