திருப்பதி மலைப்பாதையில் தொடர் விபத்து – யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு

இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் தொடர் விபத்து – யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி மலைப்பாதையில் தொடர் விபத்து – யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி மலையில், அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தவிர்க்க, மகா சாந்தி ஹோமம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.திருப்பதி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக நாள்தோறும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பக்தர்கள் மனவேதனையுடன் ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. விபத்துகளைத் தடுக்க வேக கட்டுப்பாடு, வாகன ஓட்டிகளின் முகத்தில் தண்ணீர் தெளித்தல் உள்ளிட்ட முயற்சிகளை, தேவஸ்தான நிர்வாகமும், போலீசாரும் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நேற்று ஒரே நாளில் 3 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், வரும் 14-ம் தேதி திருப்பதி மலைப்பாதையில், மகா சாந்தி ஹோமம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் திருப்பதி மலை பாதையில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டபோது நடத்தப்பட்ட மகா சாந்தியாகத்திற்கு பின் விபத்துக்கள் நடைபெறுவது வெகுவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...