11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – சித்தராமையா அறிவிப்பு

இந்தியா

11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – சித்தராமையா அறிவிப்பு

11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் – சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்தது. தேர்தலில் வெற்றி ஆட்சி அமைத்த நிலையில் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது:‛க்ருஹ ஜோதி’ என்ற திட்டம் மூலம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1ல் துவங்கும். ஆனால், ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகைகளை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும்.‛ க்ருஹ லக்ஷ்மி என்ற திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 15- முதல் அமல்படுத்தப்படும்.

‛ அன்ன பாக்யா’ திட்டம் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ஜூலை 1-முதல் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் வழங்கும் திட்டம் ஜூன் 11 முதல் நடைமுறைக்கு வரும். ஆனால், கர்நாடகா மாநிலத்திற்குள் மட்டுமே இச்சலுகையை பெறலாம். ஏசி மற்றும் சொகுசுப் பேருந்துகளிலும் இந்தச் சலுகை இல்லை. ஆண்களுக்கு 50 சதவீத இருக்கை ஒதுக்கப்படும். மற்ற இருக்கைகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

யுவாநிதி திட்டத்தின் கீழ், 2022 – 2023 கல்வியாண்டில் பட்டப்படிப்பை முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Leave your comments here...