ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி – “மோடி தி பாஸ் ” ஆஸ்திரேலியா பிரதமர் அன்டனி அல்பானீஸ் புகழாரம்

இந்தியாஉலகம்

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி – “மோடி தி பாஸ் ” ஆஸ்திரேலியா பிரதமர் அன்டனி அல்பானீஸ் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி – “மோடி தி பாஸ் ” ஆஸ்திரேலியா பிரதமர் அன்டனி அல்பானீஸ் புகழாரம்

பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடந்த 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பகுதியாக, அவர் கடந்த கடந்த 19-ந்தேதி ஜப்பான் சென்றார்.

இதில், ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவுக்கு கடந்த 21-ந்தேதி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே உடன் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணம் வருகிற 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வரவேற்றார். சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு இருவரும் சென்றடைந்த பின்னர், இந்திய வம்சாவளியினர் முன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி கூறும்போது, “பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் அவருக்கு ‘ராக்ஸ்டார்’ போன்ற வரவேற்பு கிடைக்கிறது. இதற்கு முன்பு இந்த மேடையில் புருஸ் ஸ்பிரிங்டீன் தான் (Bruce Springsteen) தோன்றியிருந்தார். அவருக்கு வராத கூட்டம் பிரதமர் மோடிக்கு கூடியிருக்கிறது.பிரதமர் மோடி ‘தி பாஸ். ஒரு வருடத்திற்கு முன்பு நான் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இது எங்களது ஆறாவது சந்திப்பாக உள்ளது. இது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. பிரதமர் மோடியே தலைவர்” என்று தெரிவித்தார்.

அதன் பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி,” ஆஸ்திரேலியா சமூக நிகழ்ச்சிகளில், புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் இணைவதில் முழுமையான மகிழ்ச்சி.சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஹாரிஸ் பூங்காவை ‘லிட்டில் இந்தியா’ என்று அறிவிப்பதற்கு ஆதரவளித்த ஆஸ்திரேலியா பிரதமருக்கு நன்றி. புலம்பெயர்ந்தோரின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பிரிஸ்பேனில் இந்தியா தூதரகத்தைத் திறக்கும். இந்தியர்களான எங்களின் வாழ்க்கைமுறை வித்தியாசமாக இருக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் யோகாசனம், கிரிக்கெட் ஆகியவற்றால் நீண்ட காலமாக இணைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு அப்பாலும், ஜனநாயகம், புலம்பெயர்ந்தவர்களின் நலன், நட்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றாலும் நமது உறவு உறுதியாகியிருக்கிறது. இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு இதற்கு அப்பாற்பட்டது என்று நான் நம்புகிறேன்.இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர நம்பிக்கை, மரியாதை இருக்கிறது. இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் தூதரக உறவுகளால் மட்டுமே உருவாகவில்லை. இதற்கு உண்மையான காரணம், ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களாகிய நீங்கள் அனைவரும்தான்.இந்தியாவில் திறனுக்கோ, வளங்களுக்கோ பஞ்சமில்லை. இன்று, IMF உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசமான புள்ளியாகக் கருதுகிறது.பல நாடுகளில் வங்கி அமைப்பு இன்றும் சிக்கலில் இருக்கும்போது, இந்தியாவின் வங்கிகளின் வலிமை எல்லா இடங்களிலும் பாராட்டப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

Leave your comments here...