குடிநீர் விற்பனையில் களமிறங்கும் ஆவின் நிறுவனம் : ஒப்பந்தப்புள்ளி வெளியீடு – அண்ணாமலை கண்டனம்..!

அரசியல்தமிழகம்

குடிநீர் விற்பனையில் களமிறங்கும் ஆவின் நிறுவனம் : ஒப்பந்தப்புள்ளி வெளியீடு – அண்ணாமலை கண்டனம்..!

குடிநீர் விற்பனையில் களமிறங்கும் ஆவின் நிறுவனம் : ஒப்பந்தப்புள்ளி வெளியீடு – அண்ணாமலை கண்டனம்..!

ஆவின் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வரும் நிலையில், குடிநீர் விற்பனையையும் தொடங்க உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ளது. 1 லிட்டர், 500 மில்லி லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில்,இந்த குடிநீர் பாட்டில்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி கோரும் குடிநீர் ஆலையானது அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின் படி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில், ‘2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய திரு @mkstalin அவர்கள், தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.

குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?

உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடி நீர் வினியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Leave your comments here...