தமிழகத்தில் முதல் முதலாக நரிக்குறவர் இன மாணவிக்கு ஜாதி சான்றிதழ்..!

தமிழகம்

தமிழகத்தில் முதல் முதலாக நரிக்குறவர் இன மாணவிக்கு ஜாதி சான்றிதழ்..!

தமிழகத்தில் முதல் முதலாக நரிக்குறவர் இன மாணவிக்கு  ஜாதி சான்றிதழ்..!

தமிழகத்தில் முதன்முறையாக, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த நரிக்குறவர் இன மாணவிக்கு, பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.மத்திய அரசு, நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து, தமிழக அரசும் பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு, நரிக்குறவர் இனத்தவருக்கு, பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இதன்படி, தமிழகம் முழுதும் நரிக்குறவர் இன மக்கள், பழங்குடியினர் பிரிவில் சான்றிதழ் வழங்கக்கோரி ஆன்லைன் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக, பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகா, காரை கிராமம், மலையப்ப நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கோகிலா உட்பட 16 மாணவ – மாணவியருக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவியின் தந்தையும், தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு தலைவருமான சுப்பிரமணியன் கூறியதாவது: நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த மத்திய, -மாநில அரசுகளுக்கு நன்றி. தமிழகத்தில் முதன் முறையாக, ‘நரிக்குறவன்’ என்ற பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கிய பெரம்பலுார் மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்

Leave your comments here...