சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!

சமூக நலன்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவையில் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!

சிறுமிக்கு  பாலியல் தொல்லை: கோவையில் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!

கோவை தெற்கு உக்கடம் அல்அமீன் காலனியை சேர்ந்தவர் முகமது வாசிம். மாவு விற்கும் தொழில் செய்து வரும் இவருக்கும், கோவையை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 14வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியிடம் பழகி வந்த முகமது வாசிம், பெற்றோர்கள் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சிறுமியின் தாயார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முகமது வாசிம்மை அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது வாசிம்மை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்த ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஐயப்பன் நகரை சேர்ந்தவர் சேக் பாவா (வயது 61). இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சேக் பாவா வசித்து வந்த பகுதியில் 9-ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி சேக்பாவா பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் மாணவியுடன் அடிக்கடி போனிலும் பேசி வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியின் தாய் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சேக்பாவா அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் அவரிடம் விசாரித்த போது தன்னை மிரட்டி சேக் பாவா கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறினார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சேக் பாவாவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave your comments here...