இந்தியர்களின் பாதுகாப்பு உறுதியானது: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: எம்பி.க்களுக்கு மோடி நன்றி.!

அரசியல்

இந்தியர்களின் பாதுகாப்பு உறுதியானது: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: எம்பி.க்களுக்கு மோடி நன்றி.!

இந்தியர்களின் பாதுகாப்பு உறுதியானது: குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: எம்பி.க்களுக்கு மோடி நன்றி.!

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இந்தநிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.


இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணியளவில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டியது. இந்நிலையில், மசோதா தொடர்பாக நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை காரசார விவாதங்கள் நடைபெற்றது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 117 பேரும், எதிராக 92 பேரும் வாக்களித்ததால், மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது.
தொடர்ந்து, மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தால், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த சிவசேனா, மாநிலங்களவையில் இந்த மசோதா மீது நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.

இதனை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார், அதில்:- நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கும் ஒரு முக்கிய நாள் என்று பதிவிட்டுள்ளார். மேலும், மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி. மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மசோதா பல ஆண்டுகளாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பலரின் துன்பத்தைத் தணிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...