முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதையான “தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்” ஆஸ்கர் விருது..!

இந்தியா

முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதையான “தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்” ஆஸ்கர் விருது..!

முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதையான “தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்” ஆஸ்கர் விருது..!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. காட்டில் தாயை பிரிந்து தவிப்பது மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து கும்கியாக மாற்றி வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இதில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை வனத்துறையினர் மீட்டு முகாமுக்கு கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பாகன்கள், கால்நடை டாக்டர் கொண்ட மருத்துவ குழு கண்காணிப்பில் குட்டி யானைகள் வளர்க்கப்படுகிறது. இதில் கடந்த 2017-ம் ஆண்டில் ரகு, 2019-ம் ஆண்டில் பொம்மி குட்டி யானைகள் முகாமுக்கு வந்தன. இதை பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர்.

இதை மையமாக வைத்து ஊட்டியை சேர்ந்த பெண் இயக்குனர் கடந்த 2019-ம் ஆண்டு தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை உருவாக்கினார். இதனிடையே அடுத்த மாதம் மார்ச் 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது. இதில் 10 பிரிவுகளுக்கான தேர்வு பட்டியலில் தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படம் இடம் பிடித்தது. இதனால் முதுமலை பாகன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை இன்று வென்றுள்ளது. தாயை பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆஸ்கர் விருதை வென்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து: The Elephant Whisperers ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றதற்கு வாழ்த்துகள். The Elephant Whisperers படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக மோடி ட்வீட் செய்துள்ளார். நிலையான வளர்ச்சி, இயற்கையுடனான நல்லுறவை The Elephant Whisperers படம் பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

Leave your comments here...