ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

இந்தியா

ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் தெலுங்கு படம், பல்வேறு மொழிகளில் திரைக்கு வந்தது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர். நாட்டு நாட்டு பாடலுக்கு பிரேம் ரக்ஷித் அமைத்த நடனம் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் விருதை வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றார். நாட்டு நாட்டு பாடலுக்கு ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாரிவேந்தர் எம்.பி., புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி: ‘நாட்டு நாட்டு’ பாடல், The Elephant Whisperersக்காக ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடல் உலகளாவியது; இன்னும் பல ஆண்டுகள் நினைவில் நிற்கும் பாடலாக இருக்கும். ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி, சந்திரபோஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர்.படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். The Elephant Whisperers ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றதற்கு வாழ்த்துகள். The Elephant Whisperers படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக மோடி ட்வீட் செய்துள்ளார். நிலையான வளர்ச்சி, இயற்கையுடனான நல்லுறவை The Elephant Whisperers படம் பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: ஆஸ்கர் விருது வென்ற பெருமைமிகு இந்தியர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். கீரவாணி, ராஜமௌலி, கார்த்திகி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை: ‘நாட்டு நாட்டு’ பாடலின் மூலம் ஆஸ்கர் விருது வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தெலுங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் அவர்களை பாராட்டி கௌரவித்தேன். இன்று அவர்கள் ஆஸ்கர் விருது வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் திரு.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Leave your comments here...