மு.க ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதிக்கு முடி சூட்டியதே . – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

அரசியல்

மு.க ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதிக்கு முடி சூட்டியதே . – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!

மு.க ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதிக்கு முடி சூட்டியதே . – எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்..!

மு.க ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை அமைச்சராக்கியதுதான்.வேறு எந்த சாதனையும் அவர் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: ஆட்சிக்கு வந்த 22 மாத காலத்தில் மிகப்பெரிய மக்கள் விரோதத்தை சம்பாதித்த கட்சி திமுகதான்.இந்தியாவில் வேறு எந்த கட்சியும் மக்கள் விரோதத்தை இப்படி சம்பாதிக்கவில்லை. மு.க ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை அமைச்சராக்கியதுதான்.வேறு எந்த சாதனையும் அவர் செய்யவில்லை.வேறு சாதனையும் கிடையாது. சினிமா படம் எடுத்தால் அந்த படத்தை எல்லாம் அந்த கம்பெனிக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த கம்பெனிக்கும் கொடுக்க முடியாது. உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கி கிடக்கிறது.

ஆக அரசியலிலும் சம்பாதிக்கிறார்கள். சினிமாத்துறையிலும் சம்பாதிக்கிறார்க்ள். சம்பாதிக்கிறதற்காகவே தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் மட்டும்தான். கருணாநிதிக்கு பேனா வைப்பதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எழுதாத பேனாவை எங்கே வைத்தால் என்ன? அதற்கு எதற்காக 81 கோடி செலவு செய்ய வேண்டும். வேண்டும் என்றால் நினைவு மண்டபத்திலேயே 2 கோடியில் ஒரு பேனா வையுங்கள். மீதி ஏழை எளிய மாணவர்களுக்கு எழுதுகின்ற பேனாவை கொடுங்கள்” என்றார்.

Leave your comments here...