9 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
- December 11, 2019
- admin
- : 1311
- PSLVC48 | ISRO
இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் திட்டமிட்ட நேரப்படி இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த செயற்கைக்கோளில் உள்ள நவீன ரேடார் மூலம் துல்லியமாக பூமியைப் படம்பிடிக்க முடியும். இந்த செயற்கைக்கோள் வாயிலாக கிடைக்கும் தரவுகள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் அடுத்து 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.
Leave your comments here...