கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்காதது ஏன்..? அண்ணாமலை கேள்வி..!

அரசியல்

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்காதது ஏன்..? அண்ணாமலை கேள்வி..!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்காதது ஏன்..? அண்ணாமலை கேள்வி..!

கிருஷ்ணகிரியில் சமீபத்தில் திமுக கவுன்சிலருக்கும், ராணுவ வீரர் பிரபுவுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த செயலை கண்டித்து தமிழக பாஜகவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.


இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: வேலூர் மாவட்டம் கம்மவான் பேட்டையில் ராணுவ வீரர்கள் அதிகம் உள்ளனர். கம்மவான் பேட்டை என்ற பெயர் தற்போது ராணுப்பேட்டை என மாறியுள்ளது. தடாபெரிய சாமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து வருந்தப்போவதில்லை. தடா பெரியசாமியின் வீடு, வாகனத்தை சீர் செய்யும் செலவை பாஜக ஏற்றுக்கொள்ளும். அந்த வாகனமும் உடைக்கப்பட்டால் ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுக்கப்படும். ராணுவ வீரர்களை கட்சி மேடையில் ஏற்றுவது அழகல்ல.


தமிழகத்தில் ராணுவ வீரர்களுக்கு மட்டும் 15 லட்சம் ஓட்டுகள் உள்ளன. ராணுவ வீரர்களுக்கு ஆதரவு அளிக்க வந்தால் என்ன லாபம் இருக்கிறது என்று சில கட்சிகள் வர மறுக்கின்றனர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தமிழகத்தில் இருப்போர் எண்ணிக்கை 2.38 லட்சம் பேர் உள்ளனர்.

அன்பு ஜோதி ஆசிரமத்தின் முழு உண்மையும் வெளிவர வேண்டும். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்.கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் பிரபு குடும்பத்துக்கு தமிழக பாஜக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.ராணுவ வீரர் பிரபுவின் 2 குழந்தைகளின் முழு படிப்பு செலவையும் பாஜக ஏற்கும். தமிழகத்தில் திமுக மட்டும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

திமுக சேர்ந்த கவுன்சிலர் அடித்து ராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டதிற்கு முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை. போலீஸ் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை. திறமைக்கும் நேர்மைக்கும் திமுக ஆட்சியில் போலீஸ் துறையில் வேலை அளிக்கப்பட இல்லை. முன்னாள் ராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் கடமை. கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்காதது ஏன்?. தமிழருக்கு எதிரான கட்சி பாஜக என்று முதல்வர் பொய் பேசுகிறார். தமிழகம் எப்பொழுதும் தேசியம் பக்கம் இருக்கக்கூடியது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...