8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் – திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழகம்

8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் – திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் –  திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூறையுடன், 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல் சேமிப்புத் தளங்களை காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave your comments here...