பாஜகவை வீழ்த்தி இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்..!

அரசியல்

பாஜகவை வீழ்த்தி இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்..!

பாஜகவை வீழ்த்தி  இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்..!

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின.

இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைவது உறுதியாகியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் தோல்வி உறுதியாகியுள்ளது.

மேலும், சுயேட்சைகள் 3 பேர் முன்னிலையில் உள்ளனர். 39 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. இதன் மூலம் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து இமாச்சலபிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் என்றார். பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில், சில விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது. சில பிரச்சனைகள் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுபற்றி விளக்கம் கேட்டு மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன் என்றும் ஜெய்ராம் தாக்கூர் கூறினார்.

Leave your comments here...