தேங்கி நின்ற மழை நீருக்குள் கொட்டப்பட்ட கான்கிரீட் : தாம்பரம் மாநகராட்சி பொறியாளர் பணி நீக்கத்தின் மறுபக்கம்..?

தமிழகம்

தேங்கி நின்ற மழை நீருக்குள் கொட்டப்பட்ட கான்கிரீட் : தாம்பரம் மாநகராட்சி பொறியாளர் பணி நீக்கத்தின் மறுபக்கம்..?

தேங்கி நின்ற மழை நீருக்குள் கொட்டப்பட்ட கான்கிரீட்  : தாம்பரம் மாநகராட்சி  பொறியாளர் பணி நீக்கத்தின் மறுபக்கம்..?

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் மூன்றில் இளநிலை பொறியாளராக இருந்த ஜெ.வெங்கடேசன் அதிரடியாக பணி நீக்கம் செய்யபட்டார்.

இதன் விபரம் வருமாறு:- தாம்பரம் மாநகராட்சி மண்டலம் மூன்று 36 வது வார்டில் மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான டெண்டர் விடபட்டு அதற்கான வடிகால் பணிக்கான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வந்த காரணத்தால் அந்த மழைநீர் கால்வாய் தோண்டபட்ட இடத்தில் குளம் போல் தண்ணீர் பெருகியது. இந்த பள்ளத்தில் மழைநீருடன் கான்கிரீட் போடும் பணியை காண்ராக்டர் மேற்கொண்டார். இதை கண்ட பொது மக்கள் அதிச்சி அடைந்தனர். இதனால் அந்த டுபாக்கூர் பணியை விடியோ எடுத்து பொது மக்கள் சமூக வளைதளங்களில் அந்த வீடியோ வைரலாக வலம் வந்தன. நிலமையை புரிந்து கொண்ட தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆணையர், சிட்டி இஞ்ஜீனியர் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது தண்ணீரை வெளியேற்றாமல் நடந்த பணிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த வார்டின் இளநிலை பொறியாளரான ஜெ. வெங்கடேசன் வழக்கமாக கமிஷன் வாங்கி பணிகளை கண்டும் காணாமல் இருந்த்து போல் இதையும் காணாமல் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. தாம்பரம் மாநகராட்சி ஏற்கனவே நகராட்சியாக இருந்த போது பணிகளே செய்யாமல் அப்பே௱தய எம்.இ. உடன் கூட்டு சேர்ந்து போலி பில் போட்டு கொள்ளை அடித்தனர். அந்த எம்.இ. பதவி உயர்வு பெற்று மண்டல பொறியாளராக இருந்தபோது அப்போதய அமைச்சர் வேலுமணியின் உதவியாளர் சரவணன் உடன் கூட்டு சேர்ந்து பிணாமி நிறுவனங்களை ஏற்படுத்தி பல கோடி நகராட்சி நிதிகளை சுருட்டிய கூட்டத்தின் பங்கு தாரர் தான் இந்த ஜெ. வெங்கடேசன்.

இவர் கடந்த ஆட்சியில் செம்பாக்கம் நகராட்சியில் ஓவர்ஸ்சியராக இருந்து தகுதி இல்லாமல் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து கருப்பான ராஜாவின் ஆதரவாளர்களில் பலர் செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளில் உள்ள நிதிகளை சுருட்டி அதிமுக தேர்தல் நிதிக்கு வழங்கினார்கள். பம்மல், ஆவடி, பல்லாவரம், செம்பாக்கம், தாம்பரம் ஆகியவைகள் நகராட்சியாக இருந்த கடந்த பத்தாண்டு காலத்தின் பணிகளை ஆய்வு செய்தால் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.!

அந்த தையிரியத்தில் தான் தற்போதும் செம்பாக்கம், தாம்பரம் ஆகிய நகராட்சிக்குட்பட்ட பொறியாளர்கள் காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது என்ற பாடல்கள் போல் உள்ளனர். இவர்கள் மக்கள் பிரதி நிதிகளை மதிப்பது கிடையாது. அதிமுக தேர்தலுக்கு நகராட்சி நிதிகளை வேலை செய்யாமலேயே பில் போட்டு கொடுத்தார்கள். கொடுக்கவில்லை நிதிகளை சுருட்ட வில்லை என்று குல தெய்வம் மீது சத்தியம் செய்வார்களா…? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போலதான் இளநிலை பொறியாளரான ஜெ.வெங்கடேசன் சிக்கி பணி இடை நீக்கம் செய்யபட்டார். இந்த ஊழல் வாதிகள் இனி தான் நிரபராதி என்றும் நான் அவன் இல்லை என்றும் நீலி கண்ணீர் வடிப்பார்கள். நகராட்சி நிர்வாக ஆணையர் இரவு பகல்பாரமால் சிறப்பாக பணியாற்றுகிறார். அது போல் தாம்பரம் மாநகராட்சி ஆணையரும் மழை நீர் தேங்காமல் இருக்க சக ஊழியர்களையும் விரைந்து பணிகளை ஆய்வு செய்து மக்கள் பிரச்சினைகளை உடனுக்கு உடன் செயல்படுத்த ஊழயர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் மூன்றில் உள்ள இளநிலை பொறியாளரான ஜெ.வெங்கடேசனை பணி இடை நீக்கம் செய்த காரணத்தால் இவரது கூட்டாளிகளும் தாம்பரம் மாநகராட்சியில் நடுக்கத்தில் உள்ளனர். காரணம் மண்டலம் 3ந்தில் குளம் தண்ணீர் நிர்கறது அந்த இடத்தில் ஒரு சிங்கிள் மோட்டாரை வைத்து தண்ணீர் வெளியேற்றம் செய்யபடுகிறது. மழை வெள்ளம் வந்து கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் அதிலும் பட்ட பகலில் இப்படி ஒரு டுபாக்கூர் வேலை செய்கிறார்கள் என்றால் இந்த ஜெ.வெங்கடேசன் ஜெ.இ கையெழுத்து போட்ட அத்தனை கோப்புகளும் கண்டாங்கிளாஸ் தான். பொதும்கள் பார்த்து வீடியோ எடுத்து வைரலாக்கிய காரணத்தால் தான் இந்த பணி இடை நீக்கம் நடைபெற்றது. இல்லா விட்டால் ஜெ. வெங்கடேசன் ஜெ.இ கரையேற்றபட்டிருப்பார்.

ஏற்கனவே இந்த மாநகாட்சியின்முதன்மை பொறியாளர் ஒருவர் ஊழல் வாதிகளுக்கெல்லாம் தரசான்றிதழ் கொடுப்பதில் வல்லவராகும். ஆகவே ஒரு பாணைக்கு ஒரு சோறு பதம் தானே. நாம சாப்பிட்டது வெளியில் தெரிந்து விடுமோ என்று. மக்களையும் ஏமாற்றி அரசையும் ஏமாற்றுபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்..!

Leave your comments here...