பேரூராட்சி இயக்குநரகத்தில் ஊழல்வாதிகளை களை எடுக்க ஓய்வு பெற்றவர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை..!

தமிழகம்

பேரூராட்சி இயக்குநரகத்தில் ஊழல்வாதிகளை களை எடுக்க ஓய்வு பெற்றவர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை..!

பேரூராட்சி இயக்குநரகத்தில் ஊழல்வாதிகளை களை எடுக்க ஓய்வு பெற்றவர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை..!

தமிழக பேரூராட்சிகளின் ஓய்வு பெற்ற செயல் அலுவலுர்கள் நலசங்கத்தின் கூட்டம் சேலத்தில் நடை பெற்றது.மாநில தலைவர் சடையப்பன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பேரூராட்சி இயக்குநர் அலுவலகத்தில் சில கறுப்பாடுகள் உள்ளனர் என்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தடை இல்லா சான்றிதழ் வழங்காமல் காலம் கடத்துகிறார்கள். இதனால் ஓய்வு பெற்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. என்றும் பேரூராட்சி இயக்குநரகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருந்து காசு சம்பாரிக்கிறார்கள். இயக்குநரிடம் தவறான வழிகாட்டுகிறார்கள்.

இதை இயக்குநர் நம்புவதால் ஓய்வு பெற்ற பலர் சாப்பட்டுக்கே திண்டாடுகிறார்கள் ஆகவே ஒழுங்கு நடவடிக்கை குழு விரைந்து செயல்பட வேண்டும். தற்காலிக பணி நீக்க காலத்தில் உள்ளவர்களுக்கு மாத இறுதியில் பிளைப்பூதியம் வழங்க வேண்டும். பேரூராட்சி இயக்குநரகத்தில் இளநிலை உதவியாளராக பணிக்கு சேர்ந்து தற்போது உதவி இயக்குநராக இருக்கும் மீனாட்சி, கண்காணிப்பாளர்கள் கறண்சி டில்லிபாபு, யமுனா, மகேஷ்வரி ஆகிய 4 பேர்கள் தான் இயக்குநரகத்தை தவறான வழி நடத்துகிறார்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தான் உதவி செய்கிறார்கள்.


ஆகவே அந்த நான்கு பேரையும் பணி மாற்றம் செய்ய வேண்டும். இவர்களால் தான். 300 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற செயல் அலுவலர்களின் கே௱ப்புகள் கிடப்பில் உள்ளது. பல முறை முறையிட்டும் இவர்கள் எங்களை மதிப்பதும் கிடையாது. என கூறி 31 தீர்மானங்கள் நிறைவேற்றட்டன. இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் ஆறுமுகம், மோகனசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கெ௱ண்டனர்

Leave your comments here...