மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் – விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்..!

இந்தியா

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் – விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்..!

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் – விண்ணப்பிக்க  நவம்பர் 15 கடைசி நாள்..!

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்கு (என்.எம்.எம்.எஸ்.எஸ்) விண்ணப்பிக்க நவம்பர் 15, 2022 கடைசி தேதி ஆகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களிடையே 8-ஆம் வகுப்பிற்கு பிறகு ஏற்படும் கல்வி இடைநிற்றலைத் தடுத்து, உயர்நிலைக் கல்வியை அவர்கள் தொடர்வதை ஊக்குவிப்பதற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு லட்சம் உதவித்தொகைகள் புதிதாக வழங்கப்படுவதோடு, மாநில அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை உதவித்தொகை மேலும் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு ஆண்டிற்கு ரூ. 12000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களின் ஒற்றை நிறுத்த தளமான தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (என்.எஸ்.பி) இந்த உதவித்தொகை இடம்பெற்றுள்ளது. முற்றிலும் மத்திய அரசின் நிதி உதவியோடு அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் கல்வி உதவித்தொகை நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.

அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 3,50,000க்கு மிகாமல் உள்ள மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற தகுதி பெறுகிறார்கள். இந்த உதவித் தொகையை வழங்குவதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் 7-ஆம் வகுப்பில் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் (பட்டியல் இன/ பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு 5% தளர்வு) மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

Leave your comments here...