ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரத்தை ஒட்டி பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்..!

இந்தியா

ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரத்தை ஒட்டி பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்..!

ஊழல் தடுப்பு கண்காணிப்பு வாரத்தை ஒட்டி பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்..!

விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம், அக்டோபர் 31, 2022 முதல் நவம்பர் 06, 2022 வரை சென்னை வருமான வரித் துறையால் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “ஊழலற்ற இந்தியா – வளர்ந்த நாடு” என்பதாகும். விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, 03.11.2022 அன்று சென்னை, வருமான வரி கூடுதல் இயக்குநர் ஜெனரல் (விஜிலென்ஸ்)(தெற்கு), மத்திய நேரடி வரிகளின் வாரியம் (CBDT) அலுவலகத்தால் ‘பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்’ ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், சென்னை, வருமான வரி கூடுதல் இயக்குநர் ஜெனரல் (விஜிலென்ஸ்)(தெற்கு), மத்திய நேரடி வரிகளின் வாரியம் (CBDT) தலைமையில், இயக்குனரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆயகர் பவன் வளாகம் முன்பு ஊழல் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த தகவல் சென்னை வருமான வரி துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...