மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 13.71 கோடி இலாபத்தில் தீபாவளி பண்டிகை ஊக்கத்தொகை..!

தமிழகம்

மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 13.71 கோடி இலாபத்தில் தீபாவளி பண்டிகை ஊக்கத்தொகை..!

மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 13.71 கோடி இலாபத்தில் தீபாவளி பண்டிகை ஊக்கத்தொகை..!

மதுரை ஆவின் சென்ற நிதியாண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 207780 லிட்டர் பால் கொள்முதல் செய்து 180000 லிட்டர் பாலாகவும் மற்றும் பால் உபபொருட்களாகவும் விற்பனை செய்து ரூ.13.71 கோடி ஈட்டியுள்ள இலாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.75 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

மதுரை ஆவின் மொத்தம் 38082 உறுப்பினர்களை கொண்ட 716 கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக பால் 171400 லிட்டர் பால் கொள்முதல் செய்து, முதல்வர் அவர்களின் சிறப்பு கண்காணிப்பில் பால்வளத்துறை அமைச்சர், மேற்பார்வையில் மதிப்பிற்குரிய நிர்வாக இயக்குநர்ஃஆணையாளர் சிறந்த தொழில்நுட்ப அறிவுரைகளின்படி மதுரை ஆவின் பொதுமேலாளர் களப்பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் முழு ஒத்துழைப்புடன் ரூ.13.71 கோடி இலாபம் ஈட்டியுள்ளது.

கால்நடைத்தீவன செலவு உள்ளிட்ட பால் உற்பத்தி செலவு அதிகரிப்பால் திண்டாட்டமாக உள்ள பால் உற்பத்தியாளர்களின் நிலையை கொண்டாட்டமாக மாற்றும் பொருட்டு (சென்ற ஆண்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிய மொத்த பாலுக்கு) லிட்டர் ஒன்றுக்கு 50 பைசா வீதம் மொத்தம் ரூ.3.75 கோடி வழங்க உத்தரவு பெறப்பட்டுஇ தற்பொழுது பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3.75 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 18050 பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகிறார்கள்.

Leave your comments here...