சிறுவனுடன் காதல் – கர்ப்பமான கல்லூரி மாணவி போக்சோவில் கைது!!

தமிழகம்

சிறுவனுடன் காதல் – கர்ப்பமான கல்லூரி மாணவி போக்சோவில் கைது!!

சிறுவனுடன் காதல் –  கர்ப்பமான கல்லூரி மாணவி போக்சோவில் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டில் சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவன் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி டூவீலரில் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்களின் வீடுகளில் எல்லாம் தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து சூர்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் ஆட்கொணர்வு மனுவையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து சூர்யாவுடன் நட்பாக இருந்தது யார்? என போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் சூர்யா இருப்பதை கண்டுபிடித்தனர். அவருடன் இருந்த 21 வயது இளம் பெண்ணையும் பிடித்து விசாரித்த போது, அந்த பெண் இளைஞருடன் சேர்ந்து படித்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது இருவரும் கல்லூரியில் படித்த போது காதலில் விழுந்தது தெரியவந்தது. இந்த நிலையில் இளைஞருக்கு 18 வயது முடிய 3 மாதம் இருந்தது. இளம்பெண்ணின் அழைப்பை ஏற்று இளைஞர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பெண்ணுடன் சென்றுள்ளார்.

இதையடுத்து கிருஷ்ணகிரி பேரிகையில் அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி உள்ளது தெரிய வந்தது. கல்லூரி மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இளைஞர் வீட்டில் இருந்து மாயமான நேரத்தில் அவர் 18வயது நிரம்பாததால் சிறுவனை கடத்திச் சென்று திருமணம் செய்த மாணவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம் சிறுவனை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.இந்த சம்பவம் அவர்களின் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave your comments here...